மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

பேரணாம்பட்டு,

தமிழக அரசின் சார்பில் பேரணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி (ஆண்கள் மற்றும் பெண்கள்), அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நுஸ்ரதுல் இஸ்லாம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி (பேரணாம்பட்டு, டி.டி.மோட்டூர்), மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பேரணாம்பட்டு டவுன் இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மரீத் கல்வி அறக்கட்டளை தாளாளர் ஜஹீர்அஹமத் தலைமை தாங்கினார். இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நிசார்அஹமத், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜவகர்உசேன் வரவேற்றார்.

அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் சிவாஜி, தேவலாபுரம் ஈ.வெங்கடேசன், மாவட்ட இணை செயலாளர் சந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ. கனகதாரா, அரசு வக்கீல் டில்லிபாபு, முன்னாள் கவுன்சிலர்கள் திருமால், ஆனந்தன், சிவக்குமார், கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply